
கூட்டு அரசாங்கத்தைப் பாதுகாக்கி ன்ற முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தி யுள்ளது. கொழும்பில் நேற்று நட த்திய செய்தியாளர் சந்திப்பிலேயே கூட்டு எதிரணி மற்றும் பொதுஜன முன்னணியின் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேஷான் சேமசிங்க, சிசிர ஜெயக்கொடி தேனுக விதான கமகே ஆகியோர் இக் குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளனர். 2015இல் மகிந்த ராஜபக்சவை அகற்றும் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் இப்போது கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள்.
உள்நாட்டு அரசி யல் விவகாரங்களில் இடம்பெறும் வெளிநாட்டுத் தலையீடுகள் தீவிர கரிச னைக்குரியதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்த பின்னர், அமெரிக்க மற்றும் இந்தி யத் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.