விக்கி-கஜன் திடீர் சந்திப்பு-அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை
அவரது இல்லத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று புதன்கிழமை காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் மற்றும் யாழ் மாநகர முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் பங்கேற்றிருந்தனர்.
மரியாதையின் நிமிர்த்தம் குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாக இரு தரப்புத் தகவல்களும் தெரிவித்துள்ள போதும்
உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று கட்சிகள் ஆட்சியமைப்பத்தில் இக்கட்டான தொங்கு நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் மிக்க சந்திப்பாகப் பார்க்கப்படுகின்றது. ஒரே கொள்கையுடைய இரு தலைவர்களும் கொள்கை கூட்டுக்கான சந்திப்பா என ஊடகப்பரப்பில் பரவலாக பேசப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் வரப்போகின்ற வடமாகாண சபை தேர்தல் என்பன குறித்தும் கலந்துரையாடியுள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.