Breaking News

நாட்டின் காலாசாரங்களை சீரழிக்கும் வகையில் 70ஆவது சுதந்திர தினம் – மகிந்த!

70ஆவது சுதந்திர தின நிகழ்வு இந்த நாட்டின் காலாசாரங்களை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். 

 நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் வாழும் மக்களுக்கென தனித்துவமான சில காலாசாரங்க ளின் அடிப்படையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும். எனி னும், தற்போது மடிகணிணி நடனங்க ளும் டெலஸ்கோப் நடனங்களும் இடம்பெறுகின்றன. மக்கள் உணவின்றி அவ திப்படுகின்றனர். இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்காமல் அனைவரும் நடனமாடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். 

பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவே ற்றப்படவில்லை. பெருந்தோட்டப்புர மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வாக்குறுதியை பொய்யாக்கி மக்களை ஏமாற்றியுள்ளனர். 

மக்களுக்காக வீட்டுத் திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தோட்டப்புறங்களில் வசிக்கும் பிள்ளைகள் தோட்டத் தொழிலாளர்களாக அல்லாமல் கல்விகற்று உயர்ந்த நிலைகளுக்கு செல்ல வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.