இலங்கை அரசியலில் அதிரடி- தனி அரசாங்க முயற்சியில் ஐ.தே.க. - த. தே.கூ வுடன் பேச்சு !
ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்கு மெனவும் அரசியல் வட்டங்களின் மூலம் தெளிவாகியது.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்ப ட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரு க்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், பாராளுமன்றக் குழுக்கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய சந்திப்புடன் பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.