தீவிர முயற்சிக்காக ஐ.தே.க.பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்தது என்ன?
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஐக்கிய தேசியக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி மத்தியில் தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து வருகின்றது.
தற்போது ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணை ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் தேசிய அரசாங்கமின்றி தனித்து அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் உயர் மட்டத்தரப்பினர் ஆரா ய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் நேற்று முன்தினம் மாலை ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நட த்திய அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இவ் விடயத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது தொட ர்பிலும் விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர்.
அதாவது இந்தக் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்துள்ளனர். இதனை செவிமடுத்த பிரதமர் இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாக அறிவித்ததுமன் நேற்று முன்தினம் மாலை மஹகம்சேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்க விரும்புவதாக பிரதமர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அப்போது ஜனாதிபதி எந்தப் பதிலையும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரே நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது தேசிய அரசாங்கம் நீடிக்கவேண்டுமானால் பிரதமர் பதவி மாற்றப்படவேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனா திபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது தான் சில தினங்களில் பாரிய மாற்றம் ஒன்றை செய்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதனைடுத்து கூட்டத்தை வெ ளியே வந்த சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி சில தினங்களில் பாரிய மாற்றம் ஒன்றை செய்வதாக கூறியிருந்தனர்.
இதேவேளை நேற்று அறிக்கை ஒன்றை வெ ளியிட்டிருந்த ஜனாதிபதி ஊடக பிரிவு ஜனாதிபதி பிரதமருடன் எவ்விதமான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இநநிலையில் இன்று மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
இதன்போது தேசிய அரசாங்கம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே ஐக்கிய தேசியக்கட்சியிடம் தற்போது 105 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் மேலும் 8 உறுப்பினர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்து வருகின்றது.
இவ் விடயத்தில் சுதந்திரக்கட்சியிலிருந்து 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிகின்றது.
இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போதும் ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சி அமைப்பது தொட ர்பில் ஆராயப்பட்டிக்கின்றது. பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவே தெரிகின்றது.
இதேவேளை நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்றக் குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் பின்னடைவுக்கான காரணம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின்போதும் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவேண்டுமென கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
அந்த வகையில் விரைவில் தேசிய அரசாங்கம் பிளவுபட்டு ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்குமெனத் தெரிகின்றது.
மேலும் தமிழ் தேசி யக்கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஐக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.