Breaking News

ஜனநாயக பலத்தை இழந்திடோம் – மாவை!

ஆயுத பலத்தோடு போராடிய சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்திருக்கின்ற போது, எங்களுடைய ஜனநாயக பலத்தை நாங்கள் இழந்து விடக்கூடாதென இல ங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின ருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பர ப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகை யிலேயே  இவ்வாறு தெரிவித்தார். 

 மேலும் தெரிவிக்கையில்....,

“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் தலைமைத்துவத்துக்கு அதிகமாக பெண்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றிபெற வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களு க்கான அதிகாரங்கள் பகிரப்படும்போது உங்களது கிராமங்களின் அபிவிருத்தி க்கான திட்டங்களை நீங்களே வகுக்க முடியும். 

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறவும் மாகாணசபையிடமிருந்து தேவைகளை நிறைவேற்றவும் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதித்து அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு அதிகமாக முயற்சி செய்கிறார் எங்களிடமிரு ந்து கொள்ளையடித்த பணத்தை செலவு செய்கிறார். 

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாதன் காரணத்தினால் இன விடு தலைக்காக ஆயுதமேந்தி போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. எமது பெண்களை மோசமாக நடத்தினார்கள் அதற்கு பொறுப்பே ற்க வேண்டிய போர்க்குற்றம் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளன. 

இந்த நாட்டிலே ஆட்சி மாற்றம் வேண்டுமென நினைத்தவர்கள் தென் பகுதி யிலும் உள்ளார்கள் வடக்கு கிழக்கிலும் இருக்கிறார்கள். எமக்கு மக்கள் இராஜ தந்திர ரீதியாக செயற்பட்டதன் காரணத்தினால்தான் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார். 

உலக நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசாங்க த்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கை வாய்ந்தவர்களாக தெரிவு செய்ய வேண்டும். 

எமக்கு எதிராக போட்டியிடுகின்றவர்கள் எம்மைப் பலவீனப்படுத்தி எங்களது வாக்குப் பலத்தைக் குறைத்து எமது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்து விட்டால் உலக நாடுகளில் நாங்கள் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்து விடுவோம். 

இந்த நாட்டில் ஆட்சியை மாறுவதற்கு ஜனநாயக சந்தர்ப்பங்கள் உதவியாக இருந்தன. யாரும் படையெடுத்து இந்த நாட்டை கைப்பற்றவில்லை சதி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. தமிழ் மக்கள் தெற்கில் இருந்த சிங்கள மக்களோடு இணைந்து தங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சியை மாற்றினார்கள். உலக நாடுகளுடன் இணைந்து எமது இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துவிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.