Breaking News

அரசின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி அறிக்கை

அரசின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடி வு கள் வெளியானதையடுத்து இலங்கை யில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ள்ளது. அதைத் தணிக்கு முகமாக நேற்று (13) கூட்டாட்சி அரசின் பங்கா ளிக் கட்சிகள் ஜனாதிபதியுடன் பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தை களை நடத்தியிருந்தன. 

கூட்டாட்சியைக் கொண்டு செல்வதா, ஐ.தே.க. தனித்து ஆட்சி அமைப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றிரவு சுமார் மூன்று மணிநேர மந்திரா லோசனை ஜனாதிபதிக்கும் பிரதமர் மற்றும் ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

முடிவு தெரியவரும் என்று ஒட்டு மொத்த நாடே காத்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிவில், அரசின் நிலைப்பாட்டை அறுதி செய்ய விசேட குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அர சின் எதிர்காலத் திட்டம் குறித்து ஜனாதிபதி நாளை அல்லது நாளை மறுதினம் அறிக்கை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.