70வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் செய்தி.!
எழுபதாவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேன முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தினார்.
“கடந்த முப்பதாண்டு காலப் பகுதியா னது இலங்கையின் எதிர்காலப் பய ணத்துக்கு மிக முக்கியமானது. எதி ர்பாராத விதமாக எல்.டி.டி.ஈ. பயங்கர வாதிகளின் எழுச்சி, நாட்டின் அபிவி ருத்தியை முப்பதாண்டு காலம் பின்னோக்கி இழுத்திருக்கிறது. எனவே, நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, நாட்டின் அனைத்துத் தரப்பினரும் முழுமை யான பங்களிப்பை வழங்க வேண்டும்.
“கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையான சாதனைகளை நாம் புரிய முடி யும்.
“நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தச் சவால்களில் முக்கியமானது பொருளாதாரம். நாம் இன்று பொருளாதாரச் சீர்கேட்டுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இதற்கு முன் அமைந்த ஆட்சிகள் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செயற்பட்டிரு ந்தாலும் அதில் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் முழுமையாகக் கிடைக்க வில்லை.
“ஜனாதிபதி பதவி முதல் கடை நிலை உத்தியோகத்தர் வரை, அரசின் அனை த்து உறுப்பினர்களும் அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி நாட்டின் அபிவி ருத்தியை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.
“அரசியல் தூய்மை யானதாக, பேதங்கள் அற்றதாக, ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடு பட்டதாக இருக்க வேண்டும். இதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் அபிவிரு த்தியை அடைய முடியும்.”
ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு தெரி வித்தார்.