Breaking News

மைத்திரி - மஹிந்த இணைப்பு விடயமாக மஹிந்த - சுசில் அவசர பேச்சு.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்தவுக்கும் இடை யில் தற்போது அவசர சந்திப்பொன்று நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இச் சந்திப்பு தற்போது கொழும்பிலு ள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாச ஸ்தலத்தில் நடைபெறுகின்றது. முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆகியோரை இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனி அரசை உருவாக்குவது குறித்த பேச்சு வார்த்தை தொடர்ந்த வண்ணமுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினரும் சுசில் பிரேம்ஜயந்த உட்பட குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள அரசி யல் குழுப்ப நிலையிலும் இச் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 


 மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.