முத்து சிவலிங்கம் பதவியிலிருந்து விலகிட : தலைவராகவும், செயலாளராகவும் ஆறுமுகன் தொண்டமான்
இலங்கை தொழிலளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவ லிங்கம் விலகிட நுவரெலியா மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இல ங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அதேநேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் பொறுப்பை மருதபாண்டி ரமேஷ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுக்கூடல் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்பக் கல்லூரியான சீ.எல்.எப்வில் இன்று காலை நடைபெற்றது.
காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயற்பட்ட பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் மருத்துவ நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவ தாக தெரிவித்திருந்தார்.
அதேவேளை, அவருக்கு காங்கிரஸின் போசகராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிதி காரியதரிசியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரனுக்கு வழங்க நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இப் பதவியை வழங்கியுள்ளது.
காங்கிரஸின் பொது செயலாளராக இருந்த என்னை எதிர்வரும் காலங்களில் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகிக்க வேண்டுமென நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஊடாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பொறுப்புகளை வழங்கி யதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் சந்திப்பு ஒன்றை ஆறு முகன் தொண்டமான் தலைமையில் இன்று நடத்தினார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் ஊடகச் சந்திப்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமை ச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், உப தலைவர் கணேச மூர்த்தி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் 11ஐ கூட்டு இணைவோடு கைப்பற்றிக்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் விபரித்தோம். அத்தோடு எதிர்காலத்தில் நிதி ஒதுக்கப்படுவதன் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் சார்பாக கலந்துரையாடினோம் என்றார்.
மேலும், மிக நீண்ட நாட்களாக பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளு எங்கள் என ஜனாதிபதியின் ஊடாக வழியுறுத்தப்பட்டு இருந்து. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.
இவருடன் இணைந்த பிறகு நாம் பதவிகளை ஏற்பதாக எண்ணியிருந்தோம். அதேவேளை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இவருடன் இணைந்து பாரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டதனால் எமக்கு கிடைத்த இப் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.