நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அலுவலகம் மீது தாக்குதல்.!
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியி லுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன் னணியின் தலைமை அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இக் குண்டுத் தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி கடற்க ரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அலுவலகம் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ள்ளது.
நேரம் குறித்து வெடிக்கும் (டைம் பொம்) குண்டு மூலமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
குறித்த பகுதிக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசேட அதிரடிப்படை யின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவினர் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








