கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு விஜயம்!
அமேரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளூர் இன்று திங்கட்கிழமை காலை 8.10 மணியளவில் சென்றடை ந்ததாக விமான நிலைய வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக அவ ன்ட்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சிய மொன்றை வைத்திருக்க அனுமதி அளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பெருந்தொகை வருமானத்தை இழக்கச் செய்துள்ளதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி அவன் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் தொட ர்பிலான நிதி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, முன்வைத்த கோரி க்கையினை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்துள்ளது.