ஜப்பான் முதியோர் வசிப்பிடத்தில் தீ விபத்து - 11 பேர் பலி!
ஐப்பானிலுள்ள வசதியற்ற முதியோருக்கான வசிப்பிடத்தில் ஏற்பட்ட தீ விப த்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் சப்போரோ பகுதியில் உள்ள 3 அடுக்குகள் கொண்ட மாடியில் நேற்றி ரவு நடந்த இந்த தீ விபத்து குறித்து இன்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேற்படி வசிப்பிடத்தில் பொருளாதா ரத்தில் பின்தங்கிய சுமார் 16 முதி யோர்கள் குறைந்த வாடகையில் வசித்து வந்துள்ள இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 11.42 மணியளவில் அங்கு திடீ ரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 11 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்.
இதனையடு த்து, மீட்பு படையினர் விரைந்து பலியானவர்களை அடையாளம் காணும் பணி யில் ஈடுபட்டு உள்ளனர்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்ட றியப்படவில்லை.