Breaking News

தளபதி விஜய்யும் அரசியலில் தடம் பதிப்பதாக - விஜய்யின் தந்தை

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து இப்போதும் திரையில் கலக்கி வருகிறது.

அப் படத்தை தொடர்ந்து, இவர் அடு த்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வரு கிறார். இவருக்கு அனைத்து நாடுகளி லும் ரசிகர்கள் உண்டு. இவரது ரசிக ர்கள் மக்கள் பலருக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள்.

மேலும், தற்போது ரஜினி மற்றும் கமல் அரசியலில் குதித்துள்ளதால், அவர்களது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். இவரை தொடர்ந்து நடிகர் விஜய்யும் அரசியலில் கால் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவிக்கையில்  ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொடுத்து விட்டேன். 

ஆனால், அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்டால் விஜய் அரசியலில் கால் வைக்க விஜ ய்யின் தந்தை முயற்சித்து வருகின்றார்.