Breaking News

பாராளுமன்றைக் கலைக்குமாறு மஹிந்த அதிரடி அழைப்பு.!

பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு சென்று உறு தியான அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும்மாவத்தை யில் அமைந்துள்ள பொதுஜன பெர முனவின் தலைமைக் காரியாலய த்தில் இடம்பெற்ற விசேட ஊடகவிய லாளர் சந்திப்பில்  கருத்துத்தெரிவி க்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கை யில், நாட்டில் உறுதியான அரசா ங்கத்தை அமைக்கும் பொருட்டு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். அதனைத்தான் மக்கள் எனக்கு வழங்கிய ஆணை தெளிவா கத் தெரிகின்றது. 

மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடு படுவேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க என க்கு விருப்பமில்லை. தாமரை மொட்டுத் தான் எனது சின்னம். அந்த சின்ன த்தின் கீழேயே எனது அடுத்த அரசியல் நகர்வுகள் அமையும்.

ஜனாதிபதியாக இருக்கும் போது நான் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வாறு சேவை செய்தேனோ அத்தகைய சேவையையே இனியும் முன்னெடுப்பேன். அப்பம் சாப்பிட்டுவிட்டு பாய்ந்து சென்றதைப்போல் நான் இடியப்பம் சாப்பிட்டு விட்டு பாய்ந்து செல்ல மாட்டேன். 

இதேவேளை, மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். ஆனால் பாராளும ன்றில் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மக்கள் தொடர்புடைய பிரச்சினைகளை பேசுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரம் குறைவானது. எதிர்காலத்தில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் பேசுவதற்குரிய நேரகாலத்தை அதிகரிக்க உரிய வர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென மேலும் தெரிவித்தார். 

 நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் நேற்று இர­வு­வரை வெளி­யான முடி­வு­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன மொத்­த­மாக 4621652 வாக்­கு­களை பெற்று 225 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி அமோ­க ­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. 

அத்­துடன் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 3210 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. அதா­வது நேற்று இரவுவரை வெளி யான முடிவுகள் பிரகாரம் 45.01 வீத­மான வாக்­கு­களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்­றுக்­கொண்­டுள்­ளது.