தேர்தலில் வென்றோர் - அபிவிருத்திகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கிராம அபிவிருத்திகள் தொடர்பில் அக்கறையுடன் செய ற்படவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா இந்துக்கல்லூரியின் வரு டாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரி மைதானத்தில் நேற்று திங்க ட்கிழமை மாலை இடம்பெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கல ந்து சிறப்பித்தார். நிகழ்வின் இறுதி யில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் கடந்த வருடம் வடமாகாண கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மிகக்குறைவாக காணப்பட்டதாகவும் எமக்கு கிடைக்கக்கூடிய நிதிவளங்களை மக்கள் பங்களிப்புடன் இணைந்து விரைவாக முன்னேற நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திடம் இருந்து யாவற்றையும் பெறமுடியாத நிலையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டுமென முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரி வித்தார்.