“சம்பந்தன் போன்றோர் தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்”
நல்லாட்சி என்ற கொடுங்கோலாட்சியின் அழிவின் ஆரம்பம் உள்ளூராட்சி தேர்தலில் பிரதி பலித்துள்ளது.
கடந்த மூன்று வருடகாலமாக நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததன் பயனே பாரிய தோல்விக்கான முதற் காரணமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர விவ ரித்துள்ளார்.
கடந்த மூன்று வருடகாலமாக நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததன் பயனே பாரிய தோல்விக்கான முதற் காரணமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர விவ ரித்துள்ளார்.
தமிழ் மக்கள் தமக்கான விடுதலை மற்றும் உரிமைகளுடன் வாழ வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போன்றவர்கள் தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டுடிமனவும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை அடைந்துள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான ஆட்சிக்கு எதிராகவே தமது வெறுப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு மக்களுக்காக அல்லாமல் மேற்கத்தைய நாடுகளின் அதாவது இந்தியா,சீனா போன்ற நாடுகளின் விருப்பத்திற்கே ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயற்பட்டனர்.
அதிகாரத்தினை பயன்படுத்தி சகல துறைகளிலும் துறைசார் சர்வாதிகாரமே காணப்பட்டது.
நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தவே முற்பட்ட னர். குறித்த விடயத்தில் நாட்டு மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். நாடு பிரிக்கப்பட்டால் குறித்த ஒரு தரப்பிணர் மாத்திரம் நன்மை அடைவர்.
நாட்டைப் பிரிப்பதால் தமிழ் அரசியல் வாதிகளின் ஒரு சிலரே நன்மை அடை வர். குறிப்பாக எதிர்க் கட்சி தலைவர் புலம்பெயர்வாழ் தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. மலைநாட்டு பிரதேசங்களில் நலனை பற்றி ஒருபொழுதும் நினைக்கவில்லை.
ஆனால் அவர்களே தமிழ் மக்களின் ஒருமைப்பாடு பற்றி பேசுகின்றனர்.
வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தற்போது உண்மை நிலையினை அறிந்துள்ளனர். அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்தமையால் தற்போது விரக்தியுற்றுள்ளனர்.
நாட்டில் கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்பான அனுபவங்களை மக்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தினை உருவாக்க முயல்வதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தமக்கான விடுதலை மற்றும் உரிமைகளுடன் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒருமித்து வாழவேண்டுமாயின் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒரு சிறந்த தலைவரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவு அளித்தவர்கள் சாதாரண பாமர மக்கள் குறிப்பாக பல வழிமுறைகளிலும் தமது உரிமைகளை இழந்து வாழும் மலைநாட்டு மக்கள் என்பதை முழு நாட்டு மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
வரலாற்று புகழ் கொண்ட இலங்கையின் அரசியல் தற்போது தனது தூய்மை யினை இழந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சில தரப்பினர் அரசியலை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும். அன்று தான் நல்லாட்சி என்ற நாமம் முழுமையடையும் அதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்திலும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனத் தெரிவித்தார்.