Breaking News

மனித உரிமைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா பயணிக்கும் சிவாஜிலிங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீற ல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே. சிவாஜிலி ங்கம், இன்று ஜெனீவா பயணிக்கவுள்ளாா். 

நாளைய தினம் முதல் கூட்டத்தொட ரில் கலந்து கொண்டு, இலங்கையை ஒரு சர்வதேச பொறிமுறை முன் நிறு த்துமாறு கோரி வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட தீர்மான த்தையும் நேரடியாக கையளிக்கவு ள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசார ணையை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அர சாங்கம் கோரி நிற்கும் நிலையில் இவ் விடயத்தை வலியுறுத்தும் நோக்குடன் மேற்படி பயணம் அமைந்துள்ளது. 

மேலும் ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொட ர்பான விவாதம் நடைபெறுகையில் இலங்கையின் நிலைமைகள் குறித்து உரையாற்றுவாா் என எதிர்பாா்க்கப்படுகின்றது.