Breaking News

யாழில் ஆண் ஒருவரின் சடலம் - கொலையா ? தற்கொலையா ?

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் வயது முதிர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா எனும் கோணத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசார ணைகளை முன்னெடுத்துள்ள னர். யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வயது முதிர்ந்த ஆணொருவரின் சட லம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய சிலுவை ராயா என்பவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் இரும்புக் கடை ஒன்றின் உரி மையாளர் என்றும் அவரது சடலம் கடைக்கு பின்புறமிருந்தும் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா எனும் கோணத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.