Breaking News

பிரதமருடன் முகப்புத்தக நிறுவன அதிகாரிகள் இன்று சந்திப்பு.!

நாட்டில் நிலவிய இனவாத வன்முறையுடன் கூடிய சூழலை தொடர்ந்து, அவை பரவுவதை நோக்காக கொண்டு விதிக்கப்பட்ட பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் இன்று இரு பிரதான சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன. 

பேஸ்புக் நிறுவனத்தின் சிறப்பு குழு வுக்கும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க வுக்கும் இடையில் ஒரு கலந்துரை யாடலும், பேஸ்புக் குழுவினருக்கும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடு த்தல் ஆணைக் குழுவின் தலைவரும் ஜனாதிபதி செயலருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் மற்றொரு கலந்துரையாடலும் நடைபெற வுள்ளன. 

இக் கலந்துரையாடல்களில் பங்கேற்க பேஸ் புக் நிறுவனத்தின், இந்திய பிர தானி உள்ளிட்ட மூவர் கொண்ட விஷேட குழுவொன்று நேற்று இரவு இல ங்கைக்கு வர ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவ்வாறு வரும் குழுவுடன் இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

 ஏற்கனவே பேஸ் புக் அதிகாரிகளுடன் தொலைதொடர்பு ஆணைக் குழுவின் அதிகாரிகள் தொலைபேசி பேச்சுக்களை நடாத்தியுள்ள நிலையில், பேஸ் புக் தடையை நீக்க நிபந்தனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். 

இனவாதத்தை தூண்டும் பதிவு என்றோ, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றோ தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு அல்லது சம்ப ந்தப்பட்ட அரசாங்க நிறுவனம் வழங்கும் எந்தவொரு பக்கத்தையும் நீக்கு வோமென பேஸ் புக் நிறுவனம் உறுதியளிக்க வேண்டுமென அரசாங்க தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

இனவாத, பிரிவினை வாத செயல்களுக்கு பேஸ் புக் கடும் எதிர் நடவடிக்கை களை கொள்கையாக கொண்ட நிறுவனம் எனும் ரீதியில் தற்போதும் அவ்வா றான பதிவுகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை எனவும், சிங்கள மொழி அறிந்த மேற்பார்வையாளர்களின் பற்றாக்குறையால் இலங்கை விடயத்தில் இனவாத பதிவுகளை முற்றாக கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் விளக்கம ளித்துள்ளது. 

இந் நிலையிலேயே இன்றைய உயர் மட்டக் கலந்துரையாடலில் இலங்கை யில் பேஸ் புக் பதிவுகளில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும், இன வாதத்தை பரப்பும் நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்த எடுக்கும் நட வடிக்கைகள் தொடர்பில் உடன்பாடுகள் எட்டப்படவுள்ளன. 

அந்த தீர்மானங்களின் பிரகார,ம் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் பேஸ் புக் கணக்குகளுக்குள் இலங்கையர்கள் தடையின்றி நேரடியாக உள் நுழைய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு தடை அகற்றப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகி ன்றது. 

இதனிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு 12.00 மணி முதல் வைபர் சமூக வலைத்தளம் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் வட்ஸ் அப் சமூக வலைத்தளம் மீதான தடையை நீக்கியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி செயலகம், பாது காப்பு அமைச்சு இதற்கான அனுமதியை தொலை த்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல் ஆணைக் குழுவுக்கு வழங்கிய நிலையி லேயே அந்த தடைகள் நீக்கப்பட்டதாக அவ்வாணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா். 

நேற்று முற்பகல் ஆணைக் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியதாகவும் அதன்படியே நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ் அப் தடையை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.