Breaking News

பிர­த­மரை நீக்கிடவே எதி­ர­ணியின் ஆராய்வு.!

பிர­த­ம­ருக்கு எதி­ராக மீண்டும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வது குறித்து ஆராயும் கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறுகின்றது.

நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்­போட்­டுள்ள போதிலும் அத­னை கைவி­ட­வில்லை. விரைவில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ருவோமெனக் கூட்டு எதிர்க்­கட்சி தெரிவித்துள்ளது. 

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்­டு­வரும் முயற்­சியில் கடந்த காலத்தில் கூட்டு எதிர்க்­கட்சி நட­வ­டிக்­கைகள் எடுத்த போதிலும் நாட்டின் அசா­தா­ரண நிலை­மை­களை கருத்தில் கொண்டு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை பிற்­போட்­டி­ருந்­தனர். 

இந்­நி­லையில் மீண்டும் தாம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வது குறித்து ஆரா­ய­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். இது குறித்து கூட்டு எதி ர்க்கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­விக்­கையில், எமது முயற்­சிகள் கைவி­டப்­ப­ட­வில்லை. 

பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­படும் நிலையில் எமக்கு சாத­க­மா­கவே அமையும். நாளை (இன்று) கூட்டு எதி ர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் கூடும் இக்­கூட்­டத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம். மேலும் நாட்டில் உள்ள அவ­ச­ர­கால நிலை­மை­களை கருத்தில் கொண்டே நாம் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை பிற்­போடத் தீர்­மா­னித்தோம். 

ஆனால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைவிட எந்த தீர்­மா­னமும் நாம் எடுக்­க­வில்லை. மேலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை வெற்­றி­கொள்ள சகல கட்­சி­க­ளு­டனும் நாம் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ம.வி.மு., தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் பிர­த­மரை எதிர்க்கும் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்கள் என அனை­வ­ரையும் சந்­தித்து எமது நிலைப்­பாட்­டினை கூறுவோம். 

எமக்கு ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்போம் எனவும் குறிப்­பிட்டார். இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச கூறு­கையில், இந்த நாட்டில் இன்று அர­சாங்கம் ஒன்று இல்­லாத நிலையில் பாரா­ளு­மன்றம் இயங்­கு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அர­சாங்­கத்தின் பல­வீனம் என்­ன­வென்­பது தெரி­ய­ வந்­துள்­ளது. 

கண்டி இன­வாத மோதலின் போது இந்த அர­சாங்­கத்தின் தேசிய பாது­காப்பின் பல­வீனம் என்­ன­வென்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இன்று சமூக வலைப்­ப­திவு தள ங்­களை முடக்­கி­யதன் மூல­மாக அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், நகர்­வு­களின் உயி­ரோட்­ட­மில்­லாத தன்மை விளங்­கி­யுள்­ளது. 

இந்த நிலையில் நாட்டில் பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி இருந்தும் எந்த பயனும் இல்லை. ஆகவே பிரதமரை நீக்கி புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும். எமது இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. 

ஆகவே தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நாம் தீர்மானித்தோம். முதல் தடவை பிரதமர் தப்பித்து விட்டார். ஆனால் தொடர்ந்தும் தப்பிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.