Breaking News

மாற்றுப் பொறிமுறையை வலியுறுத்துவார் அல் ஹுசைன் ; இலங்கை விடயத்தில் முயற்சி.!

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாத ங்கள் நடைபெறவுள்ள நிலையில் இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்ப ட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் புதிய மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஜெனிவா வளாக த்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொட ர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக தெரிவித்துள்ளாா். 

அந்த வகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படு கின்றது. 

இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹு சைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நிற்போம் என்று செய்ட் அல் ஹுசேன் தெரி வித்துள்ள நிலையில் அவர் இலங்கை குறித்து நடைபெறும் இரண்டு விவா தங்களிலும் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என தெரிவிக்கப்படுகி ன்றது. 

இதேவேளை இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபக்குழு க்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவு ள்ளன. இக் கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதி நிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு உரையாற்றியவாறு உள்ளனா்.