Breaking News

மஹிந்த காலத்தின் இன்னொரு கொடூரம் – சந்தேகநபர்களின் நிலை

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளராக இருந்த எமில் ரஞ் ஜன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரி சோதகரான நியூமல் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் ஆட்சிக்காலமான 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறைக்குள் நுழைந்த ஆயுதம் தரித்த ஸ்ரீலங்கா படையினரால் நடத்தப்பட்ட தாக்கு தல்களில் 27 கைதிகள் உயிரிழந்தனர். 

படுகொலை இடம்பெற்றபோது சிறைச்சாலை ஆணையாளராக இருந்த எமில் ரஞ்ஜன் லமாஹேவா மற்றும் கைதிகளை அடையாளம் காண்பித்து படு கொலைக்கு உதவியதாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நியூமல் ரங்கஜீவ ஆகியோர் இரகசிய பொலி ஸாரினால் அண்மையில் கைதாகியுள்ளனா். 

சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.