Breaking News

412 ஆவது நாட்களை கடந்து முல்லைத்தீவு வீதியில் போராடும் உறவுகள்!

வடக்கு கிழக்கு தமிழா் தாயகப்பகுதிகளில் காணாமல்போன தமது உறவுகளை மீட்க கோரி ஒருவருடத்தை கடந்து வீதியில் காத்திருக்கும் மக்கள் தீா்வுகள் எட்டப்படாமல் தொடா்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

முல்லைத்தீவில் கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் கூடாரம் அமைத்து ஆரம்பித்த உறவுகளின் போராட்டடம் 412 வது நாட்களை கட ந்து இன்றும் (24-04-2018) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப் பாக இரண்டு சித்திரைப் புத்தாண்டு க்களையும் வீதியில் கொண்டாடும் நிலையில் இவா்களின் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்..... முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 412 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம்.

எங்களை யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. பல துன்பங்களின் மத்தி யில் கடும் வெய்யிலில் போராடிக்கொண்டிருக்கின்றோம். காணாமல் போன உறவுகளை மீட்க அனைவரும் ஒத்துழைப்பு தரவவேண்டும். இரண்டாவது ஆண்டு ஆரம்பமாகியுள்ளது.

தற்கால வெய்யிலால் பலபேருக்கு நோய்கள் வருகின்ற நிலையில் அரசாங்க மும் எங்கள் நிலையினை கண்டுகொள்ளவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் தனிமையில் எங்கள் உறவுகளை தேடி போராட்டம் நடத்தும் நிலமை உள்ளது. சர்வதேசம் அழுத்தம் கொடுத்துவிட்டு அப்படியே விட்ட மாதிரி எங் களை துயரங்களுக்குள் தள்ளாமல் அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி அர சாங்கமாக இருந்தாலும் சரி எங்களோடு பேசி எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வரவேண்டும்.

குறிப்பாக எங்கள் பிரச்சனையில் அரசியல்வாதிகள் தலையிடவேண்டும். அவர்கள் தனிப்பட்ட கோபம் வீட்டுப்பிரச்சினை போல் உள்ளார்கள். இவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு காணாமல் போனவர்களின் உறவுகளுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனா்.