Breaking News

நாடாளுமன்ற புனரமைப்புக்கு நிதி ; சஜித் கடும் எதிா்ப்பு!

நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபா யில், 80 கிராமங்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியுமென  வீடமை ப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாய், குறித்து கருத்து தெரிவிக்கை யிலேயே இவ்வாறு தெரிவித்துள் ளாா். 

 மேலும் தெரிவிக்கையில், 

‘குறித்த நிதியில் வீடில்லாத 2000 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை புனரமைப்புச் செய்ய இவ்வளவு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது தேவையற்றது. 

மக்கள் நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்தது அவர்களின் பிர ச்சினைகளைத் தீர்ப்பதற்கே அன்றி சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல. இதற்கு ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவும் எனது அமைச்சுக்கு வழங்கப் பட்டால், 25 வீடுகளைக் கொண்ட 80 கிராமங்களை உருவாக்க முடியும்’ என தெரிவித்துள்ளாா்.