Breaking News

வடக்கு முதலமைச்சரை சந்தித்தாா் ஆறுமுகன் தொண்டமான்!

யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தொழி லாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்றைய தினம் (08.04.2018) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்ச ரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின்போது, உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவ ட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிர தேச சபைகளின் வெற்றி தொடர்பி லும், எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி யுள்ளார்.

இச் சந்திப்பின் போது, மத்திய, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கல ந்து சிறப்பித்துள்ளனா்.