பர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு.! - THAMILKINGDOM பர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  பர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு.!

  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் எழுந்­துள்ள நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தி யில் கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு இன்று நடைபெறும்.

  எதி­ர­ணியில் அம­ர­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 உறுப்­பி­னர்­க ளும் தமது இறுதி நிலைப்­பாட்­டினை இன்று முன்­வைப்பாா்கள் எனத் தக வல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

  பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு ­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 உறுப்­பி­னர்­களுள் அமைச்­சுப் ­ப­த­வி­களை வகித்த அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் பதவி வில­கி­யுள்­ளமை மற்றும் 16 உறுப்­பி­னர்­களும் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எதி­ர­ணியில் அமரவுள்­ள­தாக கோரிக்கை முன்­வைத்­துள்ள நிலையில் இன்று ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்­சியின் தீர்­மானம் மிக்க மத்­தி­ய­ குழு கூடு­கின்­றது. 

  ஜனா­தி­ப­தியின் வெளி­நாட்டு விஜ­யத்தை அடுத்து கட்­சிக்குள் பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள் எழுந்­தி­ருந்­தன. குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் பொதுச்­செ­ய­லா­ளர்கள் மாற்­றப்­பட வேண்டும் எனவும் எதிர்க்­கட்­சியில் அமர ஜனா­தி­பதி அனு­மதி வழ ங்க வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்த நிலையில் அவை அனைத்து விட­யங்கள் தொடர்­பிலும் இன்று கூடும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்ளது.

  அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தில் இரு ப்­பதா அல்­லது தனித்துச் செயற்படுவதா என்ற கேள்விக்கான விடையும் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் தெரிய வருமென ரணில் எதிர்ப்பு அணி யினர் தெரிவித்துள்ளனா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top