கதிர்காமம் பொலிஸ் நிலைய தாக்குதலில் தலைமறைவான மூவர் சரணடைந்துள்ளனா். - THAMILKINGDOM கதிர்காமம் பொலிஸ் நிலைய தாக்குதலில் தலைமறைவான மூவர் சரணடைந்துள்ளனா். - THAMILKINGDOM
 • Latest News

  கதிர்காமம் பொலிஸ் நிலைய தாக்குதலில் தலைமறைவான மூவர் சரணடைந்துள்ளனா்.

  கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக மூன்று மாத காலமாக தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் திஸ்ஸமாராமை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலை யில் இன்று சரணடைந்துள்ளனர். 

  சரணடைந்த குறித்த மூவரையும் திஸ்ஸமாராமை மஜிஸ்திரேட் நீதி மன்ற நீதிபதி உதயங்கனி ராஜபக்ச எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத் தரவிட்டுள்ளார். கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் சானக்க அமில ரங்கன, பிரபாத் புத்திக்கர, பிரபாத் சன் ஜய ஆகியோரே நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளனர். 

  கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி இரவு கதிர்காமத்தைச் சேர்ந்த பதிரனகே நிரோஷன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கோரப்பட்ட போதிலும் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்காமல் சென்றதினால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்ததினால் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகினார். 

  குறித்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தை தாக்கியதுடன் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனா்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கதிர்காமம் பொலிஸ் நிலைய தாக்குதலில் தலைமறைவான மூவர் சரணடைந்துள்ளனா். Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top