Breaking News

நேஸ்பி பிரபுவிற்கு C பாராட்டு - ஸ்ரீலங்கா அரச தலைவர்.!

இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் மாத்திரம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தி ருக்கும் நிலையில் வெறும் எண்ணாயிரம் பேரே கொல்லப்பட்டதாகக் கூறிய பிரித்தானியப் பிரபுவை “ஸ்ரீலங்காவின் மிக நெருங்கிய நண்பர்” எனக் கூறி ஸ்ரீலங்கா அரச தலைவர் பாராட்டியுள்ளாா். 

ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ், சிங்க ளம் மற்றும் முஸ்லீம் உட்பட அனை த்து இனங்களுக்கு இடையேயும் நல் லிணக்கத்தையும் - ஒற்றுமையை யும் கட்டியெழுப்பி நிரந்தர சமாதான த்தை ஏற்படுத்துவதே தமது அரசாங் கத்தின் பிரதான இலக்கு என பிரித்தா னியாவில் வாழும் ஸ்ரீலங்கா சமூக த்தினர் மத்தியில் ஜனாதிபதி உறுதியளித்துள்ளாா். 

உறுதி மொழி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் தமிழ் மக்களின் கோரி க்கைகளை உதாசீனப்படுத்தி வரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பி னரான மைக்கல் மொறிஸ் என்ற நேஸ்மி பிரபுவிற்கு ஸ்ரீலங்கா அரச தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். 

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடு களின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தா னியா சென்றுள்ள ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன ஆளும் கன் சவேடிவ் கட்சியின் பிரபுக்கள் சபை உறுப்பினரான மைக்கல் மொறிஸ் என்ற நேஸ்பி பிரபுவை சந்தித்துள்ளாா். 

இச் சந்திப்பு குறித்து செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டிருந்த ஸ்ரீலங்கா அரச தலைவரின் ஊடகப் பிரிவு ஸ்ரீலங்காவிற்கு மிகவும் நெருக்கமான பிரித்தா னிய பாராளுமன்ற உறுப்பினரான பாரோன் நேஸ்பி பிரபுவை அரச தலைவர் சந்தித்ததாக தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொட ர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்த விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய நேஸ்பி பிரபு, இறுதிக்கடட போரின் போது ஏழாயிரத்திற்கும் – எண்ணாயிரத்திற்கும் இடைப்பட்டவர்களே கொல்லப்பட்ட தாக அடித்துக் கூறியிருந்தார். 

இந் நிலையில் ஸ்ரீலங்காவின் உண்மையான நிலைப்பாட்டை புரிந்துகொண்டு ஸ்ரீலங்காவின் அபிவிருத்திக்கும் – நல்லிணக்கத்திற்கும் நேஸ்பி பிரபு தனிப் பட்ட முறையில் வழங்கிவரும் ஒத்துழைப்பு மகத்தானது என ஸ்ரீலங்கா அரச தலைவர் பாராட்டியுள்ளாா். 

 ஸ்ரீலங்காவினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளை பாராட்டியுள்ள நேஸ்பி பிரபு போரினால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஸ்ரீலங்கா அடைந்துள்ள முன்னேற்றம் சிறப் பெனத் தெரிவித்துள்ளாா். 

எனினும் ஸ்ரீலங்கா அரசின் இந் நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய நாடு களுக்கும் ஜெனீவாவிற்கும் சரியாக சென்றடையாமை கவலைக்குரிய விடை யமெனத் தெரிவித்துள்ள நேஸ்பி பிரபு, ஸ்ரீலங்காவின் உண்மை நிலையை எடுத்துரைக்க தன்னாலான அனைத்தையும் செய்வதாகவும் உறுதி மொழி வழங்கியுள்ளாா். 

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளுக்கு அமைய ஸ்ரீலங்காவில் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின் போது குறைந்தபட்சம் 40 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாக கூறப்படும் தகவல்களை திருத்தியமைப்பதற்கு நேஸ்பி பிரபுவின் தகவல்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சிங்கள பௌத்த பேரின வாத சக்திகள் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனா். 

இதேவேளை ஸ்ரீலங்காவிற்கும் – பிரித்தானியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரித்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானி யாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட் சியுடன் மிக நெருங்கிய உறவைப் பேணிவந்த பிரித்தானிய அமைச்சர் லியம் பொக்ஸை ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்தித்த போது இக் கருத்தை தெரிவித்துள் ளாா். 

ஸ்ரீலங்காவில் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதுடன் சுற்று லாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளமை விசேட முன்னேற்றமென ஸ்ரீலங்கா அரச தலைவர் தெரிவித்துள்ளாா்.