Breaking News

நாடாளுமன்ற புனரமைப்பிற்கு 100 கோடி ரூபா ; எதிா்ப்பு ராவணா பலய.! (காணொளி)

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கா கவே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்துள் ளதாக ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மந்த போசனையினால் பீடிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா இர ண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நிலையில் அதனை குறைப்பதற்கு வழி சமைக்காமல் 100 கோடி ரூபா செலவில் நாடாளுமன்றத்தை புனர மைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மாகல்கந்தே சுமத்த தேரர் தனது தீராத எதிர்ப்பினை தெரிவித்துள்ளாா்.

மலர்ந்திருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆசிபெற்றுக் கொள்வதற் காக ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதந்த தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடு பட்ட தேரர், மாளிகையின் வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள் முன் னிலையில் தனது கருத்தை தெரிவித்துள்ளாா்.

“நாட்டில் இன்று பல பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. தெற்காசிய பிராந் தியத்தில் மந்தபோசனையினால் அதிகமான பீடிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டிய த்தில் ஸ்ரீலங்கா இரண்டாவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் 100 கோடி ரூபா செலவில் நாடாளுமன்றத்தை புனரமைப்பதற்காக ஆட்சியாளர்கள் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக மிகவும் கவலையடை கிறோம்.

இந் நாட்டு ஆட்சியாளர்கள் மிகவும் வெட்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெட்கமடைய வேண்டும். நாட்டில் மந்த போசனை அதிகரித்திருக்கும் நிலையில், போசாக்கு மிக்க உணவின்றி மக்கள் தவிக்கின்ற தருணத்தில் பாரிய நிதியை நாடாளுமன்றத்திற்காக விரயம் செய் வது பற்றி வெட்கமடையவே வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்திருக்கின்றார். அவர்கள் அப்படி என்ன செய்துமுடித்து விட்டார்கள்? கற்களை புரட்டினார்களா? இல்லை. எந்த விவாதம் நடக்கிறது?

என்ன சட்டமூலம் சமர்பிக்கப்பட்டது என்பதை அறியாமல் சபையில் நன்றாக உறங்கி விட்டு இறுதியில் கைகளை உயர்த்திவிட்டு வீடு திரும்புகிறவர்களு க்கு எதற்கு விடுமுறை? இது பொய்யான விடயமாகும். அரசியலில் ஏற்பட் டுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளாா்.