Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கான தீர்மானம்.!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறு சீரமைப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக  பாரா ளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஆரம்பமாகி 45 நாட்களிற்குள் சீர்திரு த்த நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கு கட்சி முயற்சித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் சந்திப்பில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட 45 நாட்களிற்குள் தேசிய அரசாங்கத்தில் தொடர்வதா என்ற முடி வையும் ஸ்ரீலங்கா கட்சி எடுக்குமெனத் தெரிவித்துள்ளார். மே 8 ம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குழுவொன்றை நியமிக்கும் எனத் தெரி வித்துள்ள அவர் கட்சிக்குள் பல பதவிகளில் நிச்சயமாக மாற்றம் வருமெனத் தெரிவித்துள்ளார். 

இலங்கை பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது தேசிய அரசாங்கத்தி லிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர் களும் எதிரணி வரிசையில் அமர்வார்கள் என டிலான் பெரேரா தெரிவித்துள் ளார்.