Breaking News

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை – சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனா்.!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் இருவரும் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

படுகொலை நடைபெற்றபோது சிறை ச்சாலை ஆணையாளராக இருந்த எமி ல்ரஞ்ஜன் லமாஹேவா மற்றும் கைதிகளை அடையாளம் காண்பித்து படு கொலைக்கு உதவியதாக கூறப்ப டும் போதைப்பொருள் தடுப்புப் பிரி வின் பொலிஸ் பரிசோதகரான நியூ மல் ரங்கஜீவ ஆகியோரே நீதிமன்றில் முன்னி லைப்படுத்தப்படவுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறைக்குள் நுழை ந்த ஆயுதம் தரித்த ஸ்ரீலங்கா படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 27 கைதிகள் உயிரிழந்துள்ளனா். 

படுகொலை இடம்பெற்றபோது சிறைச்சாலை ஆணையாளராக இருந்த எமில் ரஞ்ஜன் லமாஹேவா மற்றும் கைதிகளை அடையாளம் காண்பித்து படு கொலைக்கு உதவியதாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நியூமல் ரங்கஜீவ ஆகியோர் இரகசிய பொலிஸாரி னால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய இவர்கள் இருவரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட னர். இந்த நிலையில் அவர்கள் மீணடும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படு த்தப்படவுள்ளனர்.