Breaking News

ஐ.தே.க. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி ; ரணில் - மைத்திரி சந்திப்பு.!

அமைச்சரவை மாற்றம் தொடா்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திக்கு தீர்வை காண்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் பேச்சு வார்த் தையை நடாத்தலாமெனத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இரா ஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறி த்தே இப் பேச்சு வார்த்தைகள் அமைந் திருக்குமென  தகவல்கள் வெளியாகி யுள்ளன. குறிப்பாக தேசிய ஒருங்கி ணைப்பு மற்றும் நல்லிணக்க அமை ச்சின் பிரதியமைச்சராக அலி சாகீர் மௌலானா நியமிக்கப்பட்டமை குறி த்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்நிலையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறலாம்.