வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் உதவிக்கரம் !
வவுனியாவில் சமூக சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பான தமிழ் விரு ட்சம் கிருமி தொற்று காரணமாக கால்களை இழந்த நபரொருவருக்கு இன்று காலை சக்கர நாற்காலியை வழங்கியுள்ளது.
கனடாவில் வசிக்கும் குணசிங்கம் என்பவரே தனது பிறந்த நாளினை முன்னிட்டு நற்காரியத்தில் ஈடுபடும் முகமாக தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக இந்த உதவியைச் செய்துள் ளாா்.
இதன் நிமித்தம் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ. சந்திரகுமார் கண்ணா இன்றையதினம் (15-05-2015)காலை குறித்த சக்கர நாற்காலியை பயனாளியிடம் வழங்கியுள்ளாா்.
இவ் உதவியைப் புரிந்தமைக்காக எமது இணையம் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தங்களது இது போன்ற சேவை மென் மேலும் நிலைத்து நிற்க தங்களை வாழ்த்துகின்றோம்.