வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சா லைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறுவதாக தகவல் வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிற்கு அநீதி நடைபெறு வதாகவும் போதைவஸ்து பாவனைகளும் அதிகளவில் ஈடுபடுவதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த னர்.
இதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக் குள் போதைவஸ்து பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச் சாலைக்குள் போதைவஸ்து வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை
நேற் றைய தினம் (14-05-2018) சிறைக் காவலர்கள் தாக்கியமையால் வைத்திய சாலையில் கைதி அனுமதிக்கப்பட் டுள்ளாா்.
தொடர்ச்சியாக சிறை கைதிகள் அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு நடவடி க்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் (15-05-2018) சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.