Breaking News

தமிழர் தாயகத்தில் தமிழினப் படுகொலை நாள் அனுட்டிப்பு.!

தமிழினப் படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமி ழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர் வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

2009 ம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத் தம் முடிவுக்கு வந்த நாளில் கொல் லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உற வுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின் றது. 

வடமாகாண சபை, யாழ். பல்கலைக் கழக மாணவர்கள்,மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்அனுஷ்டிக்கப்படவுள்ளன. 

காலை 11 மணிக்கு முதலமைச்சரினால் பொது சுடர் ஏற்றி வைக்கப்படுவதை தொடர்ந்து பொது மக்கள் ஏனைய சுடர்களை ஏற்றவுள்ளார்கள்.. அத்துடன்  வட மாகாண முதலமைச்சரினால் நினைவு நாள்உரையும் நிகழ்த்தப்படவுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ் வில் பங்கேற்பதற்காக வட மாகாணத் தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக் கள் முள்ளிவாய்க்கால் நோக்கி படை யெடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மக்களுக்கான தாக சாந்தியை தீர்க்கும் வகையில் வீதிகளில் தண்ணீர் பந்தல்களும் வைக்கப்பட்டுள்ளன. முள்ளி வாய்க்கால் நினைவு நாளான இன்றைய தினம் வடமாகாண சபையினால் வடக்கில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்றைய தினம் நண்பகல் 1 2 மணிவரைவர்த்தகர்கள் கடை களை அடைத்து துக்கதினமாக அனுஸ்ரிக்குமாறு கோரப்பட்டதற்கமைவாக இன்று முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்களை பூட்டி துக்க தினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முள்ளியவளை தண்ணீரூற்று ஒட்டுசுட்டான் மாங்குளம் மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி தமது பூரண ஆதரவை நல்கியுள்ளனா்.