மன்னாரில் முன்னாள் போராளி வீட்டில் துப்பாக்கிச்சூடு !
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று (17.05.2018) வியா ழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் சென்றவர்கள் முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ள தோடு,
துப்பாக்கிச் சூட்டினையும் மேற் கொண்டு தப்பிச் சென்றவர்கள் கொழு ம்பில் இருந்து வருகை தந்த அரச புல னாய்வுத்துறையினர் என தகவல் பர வியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.,
மன்னார் உயிலங் குளம் புதுக்குடியிறுப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிய ளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்று முன்னாள் போராளி ஒரு வரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு வெள்ளை நிற காரில் வந்த குறித்த குழுவினர் முதலில் குறித்த முன்னாள் போராளியான விவசாயியின் வாகன சாரதியை பிடித்து அவரை தாக்கி கை விலங்கிட்டு தமது வாகனத்தில் ஏற்றி குறித்த போராளி யின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த முன்னாள் போராளியான விவசாயியை பிடித்துச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கியுடன் வந்த குழுவினருக்கும், முன்னாள் போராளி மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்த குறித்த குழுவினர் சரமாரியாக சுமார் 4 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர்.
குறித்த குழுவின ருக்கு முன்னாள் போராளி உள்ளிட்ட உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ள தோடு, கைவிலங்கிடப்பட்டு வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த வாகன சார தியையும் மீட்டெடுத்துள்ளனா்.
இந் நிலையில் குறித்த குழுவினர் தமது காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள னர். இதன் போது குறித்த சாரதியின் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை அவருடைய மேல் ஆடையுடன் கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் வெற்று ரவைகள் - 4, வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவை காணப்பட்டது.
உடனயடியாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனுக்கு தகவல் வழங்கியதோடு, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத் திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பொலிஸார் அங்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த காரில் துப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் தாங்கள் பொலி ஸார் என தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனா்.
விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து அங்கு காணப்பட்ட தடையப் பொருட்களான வெற்று ரவைகள்; 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனா்.
எனினும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததுடன் மேலும் குறித்த சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளுடன் ஆடை ஒன்று இருந்ததாகவும், தூப்பாக்கியு டன் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் தெரிவித் துள்ளனா்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அரச புலனாய்வுத்துறையினர் என சந்தேகிப்பதாகவும், பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனா்.
தாக்கதலுக்குள்ளான குறித்த புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர் கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.