Breaking News

நன்றியில்லாமல் என்னை குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் என்கிறாா்? வியாளேந்திரன்!

சமாதான நீதவான் பதவிக்கு நான் விண்ணப்ப படிவம் எடுத்துக் கொடுத்த, அவர்களது விண்ணப்பங்களில் கையெழுத்திட்ட, அதைக் கொண்டு அமைச்சி டம் கொடுத்த நன்றியுமில்லாமல், நான் சமாதான நீதவான் பதவி வழங்க வில்லையென குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது என பாராளு மன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்.,

நான் சமாதான நீதவான் பதவி வழங் குவதாக கூறி கடந்த இரண்டு வருடங் களாக ஏமாற்றி வருவதாக சில ஊட கங்களில் பொய்யான குற்றச் சாட்டுக் களை முன்வைத்து செய்திகள் பரவ லாகியுள்ளன. 

உண்மையில் குறித்த செய்தி தொடர்பான உண்மைத் தன்மையை குறித்த ஊடகங்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்டு வெளியிட்டிருக்கலாம் ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. உண்மையில் சமாதான நீதவான் பத விகளை வழங்குவது நீதி அமைச்சு, அதற்கு சிபாரிசு செய்பவர்களே பாராளு மன்ற உறுப்பினர்கள்.

அந்த வகையில் நானும் சிலருக்கு சமாதான நீதவான் பதவி பெறுவதற்கான விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு நீதியமைச்சிடம் கையளித்திருந்தேன். சகல ஆவணங்களையும் அனுப்பி உள்ளேன், ஆனால் அந்த பதவி இன்று வரை வழங்கப்படவில்லை என அறிகிறேன். எனக்கு மட்டுமல்ல ஏனைய பாராளு மன்றம் உறுப்பினர்கள் அனுப்பிய நபர்களுக்கும் வழங்கப்படவில்லை.

உண்மையில் சமாதான நீதவான் பதவி என்பது வலிந்து பெறும் பதவியும் அல்ல, அது அரசியல் வாதிகளால் வழங்கப்படுவதும் அல்ல. அது ஒரு கௌர வமான பதவி, அதற்கு தகுதியான நபர்களை உறுதிப்படுத்தி சிபாரிசு செய்வது மட்டுமே எங்களது வேலை, அதை சரியாக செய்து முடித்து அனுப்பியுள்ளேன், அந்த ஆவணங்களை வைத்து நான் என்ன செய்ய முடியும்?

ஆனால் இதை புரிந்து கொள்ளாத சிலர் நான் விண்ணப்ப படிவம் எடுத்துக் கொடுத்த நன்றியுமில்லாமல், அவர்களது விண்ணப்பங்களில் கையெழுத் திட்ட நன்றியுமில்லாமல், அதைக் கொண்டு அமைச்சிடம் கொடுத்த நன்றியு மில்லாமல், நான் சமாதான நீதவான் பதவி வழங்க வில்லை என்று குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

கடந்த காலங்களில் நீதி அமைச்சில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும், நீதி அமைச்சில் சமாதான நீதவான் பதவிக்கான ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கும் நிலையில் தற்போது மூன்று வருடங்களுக்கு மேலாக சமாதான நீதிவான் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அது கிடைக்காத நிலை உள்ளது. நான் நீதி அமைச்சுக்கு சென்று நேரடியாக கேட்டபோது, அதற்கு அவர்கள் நாங்கள் " இனி விண்ணப்பத்தாரருடன் மட்டுமே தொடர்பு கொள்வோம்" எனக் கூறினார்கள்.

எனவே என் மீது சேறு பூச வேண்டும் என்பதற்காக நான் செய்த நல்ல விட யங்களை கூட எனக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றமை வேதனையான விடயம். 

என்னால் சிபாரிசு செய்து அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் யாருக்கும் அந்த பதவி இன்று வரை கிடைக்கவில்லை என்றால் அது நீதியமைச்சில் உள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையாக இருக்கலாம். 

எனவே இது போன்ற செய்திகளை எழுதும் செய்தியாளர்கள் குறித்த பிரச் சினை சம்பந்தமாக என்னிடம் கேட்டுவிட்டு செய்திகளை தெரிவித்திருக்க வேண்டுமென  மேலும் தெரிவித்துள்ளார்.