மின்னல் தாக்கி ஒருவர் பலி!
கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் சூரியபுர - சமநல பாலத்தடியைச் சேர்ந்த 51 வயதுடைய ரத்னாயக்க முதியன்சலாகே அபேகோன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தகவல் வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் வயலுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த நபரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் முன்னெ டுத்துள்ளனா்.