Breaking News

தமிழின அழிப்பு கவனயீர்ப்பு கண்காட்சி ஜேர்மன்!

மே 18 தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு பல்லின சமூ கத்திடம் நீதி கோரி ஜேர்மனியில் தொடர்ந்தும் 7 ஆவது நாளாக கவனயீர்ப்பு கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

கண்காட்சி நேற்றைய தினம் Karlstruhe நகர மத்தியில் நடைபெற்றுள்ளது. வர லாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுக்கும் இன அழிப்பை ஆதார பூர்வமாக இக் கண்காட்சியில் வடி வமைத்து, ஆங்கிலத்திலும் ஜேர்மன் மொழியிலும் விளக்கங்களுடன் காண் பிக்கப்படுகின்றது. 

கவனயீர்ப்பு கண்காட்சி இன்றைய தினம் காலை Nurnberg நகரத்திலும் மாலை Stuttgart நகரத்திலும் நடைபெறவுள்ளது.

மேலும், மே 18, வெள்ளிக்கிழமை தமிழின அழிப்பு நாள் அன்று மதியம் 2 மணி யளவில் Dusseldorf மாநகரில் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டு, உள்ளூராட்சி பாரா ளுமன்றத்தின் முன்பாக நினைவு நிகழ்வுகள் நடத்தப்படும் என ஏற்பாட்டா ளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி வேற்றின மக்கள் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பை விளங்கிக்கொள்ளகூடிய வகையில் அமைந்துள் ளது. நடைபாதையில் செல்லும் வேற்றின மக்கள் இந்த கண்காட்சியை பார் வையிட்டு ஈழத்தமிழர்கள் மீது கரிசனையும், அவர்கள் தொடர்பான உண்மை யையும் அறிந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.