சீனப்பிரஜை ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு!
இலங்கைக்கு வருகை தந்த சீன பிரஜையொருவர் காணாமல் போயுள்ள நிலை யில், அவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் தீவிரமாக செய ற்பட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரி வாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதிகளை கடந்த 12ஆம் திகதி பார்வையிட சென்ற அவர், தொட ர்ந்து தெனியாய காட்டுப்பகுதிக்குச் சென்றபோதே காணாமல் போயுள் ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முன் னெடுத்துள்ளனா்.
தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல்போன சீனப் பிரஜையின் தொலை பேசி, மேற்சட்டை மற்றும் பாதணிகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
சீனப் பிரஜையின் மாயம் பல மர்மங்களை தோற்றுவித்துள்ள நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.