Breaking News

இலங்கைக்கு வாழ்த்துக் கூறிய ஐ.நா மனித உரிமைப் பேரவை!

ஐ.நாவில் மனித உரிமை பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் உரை யாற்றிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன், இலங்கை தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அதிகாரிகளை கடந்த 5 ஆண்டுக ளில் 5 தடவைகள் ஸ்ரீலங்காவிற்குள் அனு மதித்தமை தொடர்பிலேயே அவர் தனது பாராட்டை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் ஜெனி வாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள் ளது.

இக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐ.நா சபை யின் செயலாளர் செய்ட அல் ஹுசைன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த உரையில், தனது கடந்தகால சிறப்பான பணிகளை நினைவுகூர்ந்த செயிட் அல் ஹுசைன், முற்றிலும் மகத்தான பணிக்கு உறுதியளிக்கும் ஒரு வலுவான அலுவலகத்திலிருந்து தான் வெளியேறப் போவதாகத் தெரிவித் துள்ளாா்.

இதுவரை காலமும் மிகவும் கடினமான, மிகவும் சவாலான பொறுப்புக்களை தான் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் போது, பல தியா கங்களை மேற்கொண்ட மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகத்தி னருமே தனது பார்வையில் மிகச் சிறந்த வீரர்கள்” என பாராட்டுக்களை தெரி வித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஹுசைனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், அல் ஹுசைனின் தலைமையில் நடைபெறும் இறுதிக் கூட் டத்தொடராக குறித்த கூட்டத் தொடர் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.