Breaking News

ஜனாதிபதி வேட்பாளராக முடியுமா கோட்டாபய: மஹிந்த பச்சைக்கொடி!

ஸ்ரீலங்காவின் எதிர்வரும் ஜனாதி பதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென மக்கள் விரும்புவார் களானால், அவரை கூட்டு எதிரணி யின் வேட்பாளராக நிறுத்துவதில் சிக் கல் இருக்காதென முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள் ளார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட் பாளராக நிறுத்த வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணி யில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளின் தலைவர்களும், சிங்கள கடும்போக்கு வாத தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையிலேயே முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் அமைத்துள்ள வியத்மக என்ற அமைப்பின் ஊடாக நாடு தழு விய ரீதியில் கூட்டங்களை நடத்தி, நாட்டின் ஆட்சி எவ்வாறு இருக்க வேண் டும் என்றும், பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தீர்மா னித்துள்ளதாலேயே அவர் நேரடியாக இவ்வாறான பிரசாரங்களை மேற் கொண்டு வருவதாக அவரது ஆதரவாளர்களும், எதிர் தரப்பினரும் தெரிவித் துள்ளனா்.

இந்த நிலையில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வும், மக்களும் விரும்பினால், தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிடத் தயார் என்றும் கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டி யிட வேண்டுமென மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும், நாடாளுமன்ற உறுப் பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும், அதேபோல் மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துவரும் கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. 

இந் நிலையில் நேற்றைய (10.06.2018) தினம் கொழும்பில் நடைபெற்ற வைபவ மொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகவியலாளர்கள் வினவினர். 

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, மக்கள் விரும்பினால் கூட்டு எதிரணி யின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை நிறுத்துவது குறித்து ஆராய முடியுமெனத் தெரிவித்தாா். 

கூட்டு எதிரணி என்பது ராஜபக்சக்களின் கட்சி அல்ல என்று தெரிவித்துள்ள மஹிந்த, அதில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் இருப்பதா கவும் தெரிவித்தாா். 

இதனால் அந்தக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி அதற்கமை யவே தீர்மானம் எடுக்கப்படுமென மஹிந்த குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் மஹிந்தவிற்கு உடன் பாடில்லை என்று வெளியாகிவரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார். 

சகோதரர்களான தாங்கள் ஒன்றாக இருந்தால் அரசியல் ரீதியாக தோல்வி யைத் தழுவுவோம் என்று கருதும் ஆளும் தரப்பினரும், ஏனைய அரசியல் கட்சியினருமே சகோதரர்களுக்கிடையில் மோதல் என பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அண் மைக் காலமாக முஸ்லிம் மக்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் பல தகவ ல்களை வெளியிட்டு வருகின்றார். 

குறிப்பாக கோட்டாபய அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியான 2014 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிக மோசமான இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட தென்பகுதி பிரதேசமான அளுத்கம தர்கா நகர் பகுதி யில் மே மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றிருந்த முஸ்லிம்களின் புனித ரம்ழான் மாதத்தினை முன்னிட்டு நடைபெறும் இப்தார் நிகழ்விலும் கோட் டாபய ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். 

தனது சகோதரரான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக் கள் தங்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருந்ததாகவும் இதனை பொறுக்க முடியாத சர்வதேச மற்றும் உள்ளூர் சக்திகளே திட்டமிட்டு முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அந்தப் பழியை தங்கள் மீது சுமத்தியதாகவும் கோட்டாபய விளக்கமளித்திருந்தார். 

யூன் மாதம் 8 ஆம் திகதியான கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடை பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட கோட்டாபய ராஜபக்ச அங்கு வந்தி ருந்த முஸ்லிம் மக்கள் முன்னிலையில், இதே கருத்தை தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இந்நாட்டு முஸ் லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை, துன்பங்களை மறைப்பதற்கு எந்த யுக்திகளாலும், எந்த சக்திகளாலும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களின் ஆதரவை தேடி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்திருக்கும் அர சியல் நகர்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ராஜபக்ச இன்று முஸ் லிம் மக்களுடன் நட்புறவுடன் இருப்பதுபோன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருவதாக குற்றம்சாட்டும் முஜிபுர் ரஹ்மான், இதனாலேயே ஒருசில முஸ் லிம் நபர்களுடன் இணைந்து ரமழான் இப்தார் நிகழ்ச்சிகளில் கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றி வருவதோடு, முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவது போல நடித்தும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ச இனிவரும் ராஜபக்சக்களின் ஆட்சியில் முஸ் லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று உறுதி மொழி கூறியிருந்ததையும் நினைவு கூர்ந்துள்ள முஜிபுர், அவரின் அந்தக் கூற்றே அவர்களது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்பதற்கு உண்மையான ஆதாரமெனத் தெரிவித்துள்ளாா். 

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது அட்டுழியங்களை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றம்சாட்டிய அவர், முஸ்லிம் வர்த்தகர்களை கடத்துவது முதல், முஸ்லிம் மக்களின் வணக்க வழிபாடுகளை தடுக்கும் நோக்கில் 'கிரீஸ்யகா' என்ற பீதியைக் கிளப்பும் மனிதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் உளவியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தி அச்சுறுத்தி முஸ்லிம்களை பீதியடைய வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்ச என்ற இந்த மனிதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன் னல்களையும், அச்சுறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் இலகுவில் மறந்து விட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் முழுமையான அனுசரணையில் மற்றும் ஆதரவுடன் இனவாத சக்திகள் புற்றீசல்களாய் பிறப்பெடுத்தன என்றும் தெரி வித்துள்ளார். 

முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான துவேச பிரசாரங்களுக்கு களம் அமைத் துக் கொடுக்கும் பணியையும் கோட்டாபய ராஜபக்சவே தனது அதிகாரத்தை வைத்து திட்டமிட்டு செயற்படுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான பின்னணியை கொண்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ச இன்று திடீரென முஸ்லிம்களுடன் நட்புடன் இருப்பதாக காட்டுவதற்கு முற்பட்டுள்ள அவரிடம் இருந்து முஸ்லிம் மக்கள் மிகவும் அவ தானமாக இருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.