5 மணிநேர விசேட விசாரணை - தயாசிறி ஐசேகரவிடம்.!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரு மான தயாசிறி ஜசேகரவிடம் சி.ஐ.டி.யினர் நேற்று 5 மணிர நேரம் விசேட விசா ரணையொன்றை முன்னெடுத்துள்ளனா்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபர் பட்டிய லில் உள்ள பேப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான வோல்ட் என்ட் ரோ நிறுவனத்திடமிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை பெற்ற குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபர் பட்டியலில் உள்ள பேப்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவங்களான இரு மதுபான நிறுவங்கள் (டப்ளியூ எம். மென்டிஸ், வோல்ட் என்ட் ரோ), பேப்பர்ச்சுவல் எசட் மெனேஜ்மென்ட், பேப்பர்ச்சுவல் கெபிடல் பிரைவட் லிமிடட், பேப்பர்ச்சுவல் கெபிடல் ஹோல்டிங்ஸ் பிறைவட் லிமிடட் ஆகியவை ஊடாக பலருக்கு பல்வேறு சந்தேகத்துக்கு இடமான முறையில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.
இந் நிலையில் டப்ளியூ. எம். மென்டிஸ், வீல்ட் என்ட் ரோ நிறுவனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரபலங்களுக்கும் காசோலை வடிவில் பணம் வழங்கியமை சி.சி.டி.யால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த 2015. ஜூன் 13 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு வோல்டன் என்ட் ரோ நிறுவனம் ஊடாக 0073900772 எனும் நடை முறைக் கணக்கில் இருந்து 566635 எனும் காசோலை இலக்கத்தைக் கொண்ட காசோலை வழங்கப்பட்டிருந்தது.
இந்த உடன் காசோலையை தயாசிறியின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் கான்ஸ்டபிள் அமில குமார ஹேரத் குருணாகல் பகுதியில் வங்கியொன்றில் மாற்றி பணமாக்கியமையை அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத் தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்துள்ளது.
இந் நிலையில் அந்த விடயங்கள் குறித்து நேற்று தயாசிறியிடம் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.