Breaking News

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு ஆதரவு நல்கியோருக்கு ராஜபக்ச ஆட்சியில் மரண தண்டனை: கோட்டா அணி எச்சரிக்கை!

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் வலிந்து காணாமல் போகச் செய் யப்படுவதை பாரதூரமான குற்றமாக அடையாளப்படுத்திய சட்டங்களை கொண்டுவந்த மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்த அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் ராஜபக்ச ஆட்சியில் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப் பட்டு, மரண தண்டனை வழங்கப்படுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் எளிய என்ற அமைப்பு பகிரங்க எச்சரிக்கை விடுத் துள்ளது. 

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்தபோது ஸ்ரீலங்கா இராணுவத் தின் கீழ் உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையணியின் முதலா வது கட்டளைத் தளபதியான முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவே இவ் எச்ச ரிக்கையை விடுத்துள்ளாா்.  

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஒளி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பி லுள்ள தேசிய நூகலத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (12.06.2018) நடைபெற்றது. 

தென்னிலங்கை கடும்போக்குவாதப் பிரிவுகள் மற்றும் ஸ்ரீலங்கா படையினரை நியாயப்படுத்தும் பிரதிநிதியாக ஐ.நா மனித உரிமைப் பேரவைக் குழுக் கூட் டங்களில் கலந்துகொள்ளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கலந்துள்ளாா். 

இவ் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பாதிக்கப்பட்ட தமிழர் தரப் பினருக்காக குரல் கொடுத்துவரும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கு நேரடி எச்சரிக்கையொன்றை பிறப்பி த்துள்ளாா். 

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ‘நல் லாட்சி வந்தபின்னர் வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் 22 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். 

திட்டமிடப்பட்ட முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும், தமிழ் யுவதிகளை திட்டமிட்டு மலட்டுத்தன்மை செய்திருப்பதாகவும் போன்ற குற் றச்சாட்டுக்கள் அடங்கிய யோசனைகளை நிறைவேற்றியிருக்கிறார். அதில் ஒன்றுகூட அரசாங்கத்தால் நிராகரிக்கவில்லை. 

அரசு அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு பகுதியில் வாழ்கின்ற மக்கள் எந்நேரமும் இனப்படுகொலை செய்யப்படுகிறார்களா? சித்திரவதைக்கு உட் படுத்தப்படுகிறார்களா? 

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த இடமளிக்கப்படு வதில்லையா போன்ற விடயங்கள் பூரணமாகும் பட்சத்தில் சர்வதேசத்தின் ஊடாக தனியாட்சியை கோருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்.

எனவே காணாமல் போனோர் அலுவலகம், வலிந்து காணாமல் போகச் செய் யப்பட்டமை தொடர்பான சட்டம் போன்றவற்றை முன்வைத்தவர்கள், அதனை ஆதரவித்தவர்கள் அனைவரும் அடுத்துவரும் அரசாங்கத்தினால் நிச்சயமாக தேசத்துரோகிகள் என்ற வழக்கு தொடரப்படும். 

தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றினால் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் எந்தவொரு நாட்டிலும் கொடு க்கப்படுகின்ற மரண தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். 

இதனை செய்கிற அரசியல்வாதிகள் அதேபோல அரச மற்றும் ஏனைய அதி காரிகள் ஆகியோரும் இதே நிலைமையே தங்களுக்கு நேரிடும் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டும்”. 

இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் எதிர் பார்க்கின்ற வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய தனியாட்சியை அமைப்ப தற்கான வழிகளை ஏற்படுத்துவதற்காகவே ஜே.வி.பியினரால் 20-ஆவது திருத் தம் கொண்டு வரப்படுவதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றம் சுமத்தி யுள்ளாா்.

‘ஆட்சியாளர்களின் பலவீனமே இதில் தெரிகிறது. வடக்கில் விடுதலைப் புலி களின் போராளிகளை நினைவு கூர்வதையே அவர்கள் செய்கின்றனர். இது வொரு தமிழின இனப்படுகொலையென கூறியுள்ள விக்னேஸ்வரன், ஒவ் வொரு வருடமும் இதனை அஞ்சலிப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

உண்மையாக கூறினால் இது படிப்படியான தனியாட்சி ஒன்றுக்கான ஆயத் தங்களையே இவர்கள் செய்கின்றனர். அவர்கள் வடக்கை முழுவதிலும் தமிழ் மக்கள் மாத்திரம் வாழ்கின்ற மாகாணமாக மாற்றியுள்ளனர். 

இனச்சுத்திகரிப்பு காரணமாக அங்கிருந்த அனைத்து முஸ்லிம் மக்களும் படுகொலை செய்யப்பட்டு அல்லது அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதே போல அங்கிருந்த அனைத்து சிங்கள மக்களையும்கூட வெளியேற்றியுள்ள னர். 

99.9 வீத தமிழ் மக்கள்தான் அங்கு வாழ்கின்றனர். அவர்களே நிர்வாகத்தையும் செய்கின்றனர். மேலும் அவர்களுக்கென தமிழ் மொழிமூல தேசிய கீதம்கூட உள்ளது. 

அதேபோல தனியாட்சியொன்று உறுதிப்படுத்துவதற்கான முதலாவது தடை என்னவென்றால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அமுல்படுத்த இடமளியா மையே ஆகும். அதுபோன்ற அதிகாரங்களை பயன்படுத்த இடமளியாமையை சுட்டிக்காட்டி தனியாட்சிக்கு செல்வதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமை கின்றது. 

13-ஆவது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுமையாக செயற்படுத்த திருத்தங்கள் ஊடாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆளு நரின் கீழ் முதலமைச்சர் இருக்க வேண்டும் போன்றவைகளே அவை.

இந்நிலையில் ஜே.வி.பியின் தலைவர் பிரதமர் ரணிலின் வேலைத்திட்டத்தை பெற்று 20-ஆவது திருத்தத்தின் ஊடாக அந்தத் தடைகளை ஒவ்வொன்றாக நீக்குவதே நோக்கமாகும். 

அதன் பின்னர் ஒரு மோதலை ஏற்படுத்தி அதனை நாங்கள் தடுக்கும்போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்த இடமளியாதி ருக்கிறீர்கள் என்ற காரணத்தை அவர்களால் சுட்டிக்காட்ட முடியும். 

அதனூடாக பாதுகாப்பு சபை, ஐ.நா சபைக்கு முறையிட்டு வடக்கு, கிழக்கை முழுமையாக தனியாட்சிக்கு உட்படுத்த எதிர்பார்க்கிறார்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.