Breaking News

"மஹிந்த அணி­யா­கவே இனிவரும் காலங்களில் செயற்­ப­டுவோம்"

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய ­குழு உள்­ளிட்ட சகல குழுக் கூட்­டங்­க­ளையும் நிரா­க­ரித்து தாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மாத்­திரம் இணைந்து செயற்­ப­ட­வுள்ளோம். 

இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணி­யினர் இல்லை என அவ்­வ­ணி­யினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா ­தீன அணி­யினர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தனர். 

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்­ளிட்ட பொது­ஜன முன்­னணி உறுப்­பி­னர்­களை சந்­தித்­தனர். இச் சந்­திப்பு குறித்து வின­விய போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா். 

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன் சென­வி­ரத்ன தெரிவிக்­கையில்,

ஆட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் எமக்கும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்குமிடையில் விரிசல் நிலை­மைகள் ஏற்­பட்­டன. பிர­தான செயற்­பா­டு­களில் நாம் முரண்­ப­டக்­கூ­டிய நிலை­மைகள் ஏற்­பட்­டன. 

எனினும் இச் சந்­திப்பின் மூல­மாக எமது இரு தரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­யதும் அடுத்தகட்டப் பயணம் ஒன்­றினை தெளி­வாக முன்­னெ­டுக்­கவும் கூடி­ய­தாக அமைந்­துள்­ளது. 

அடுத்த கட்­ட­மாக நாம் இரு தரப்­பி­னரும் பொது­வான வேலைத்­திட்டம் ஒன் றின் கீழ் செயற்­படத் தீர்­மானம் எடுத்­துள்ளோம். ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து அர­சாங்­கத்திலிருந்த நேரத்தில் எமது இரு தரப்­பி­ன­ரையும் இணைக்கும் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி தீர்­வு­களை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்தோம். 

எனினும் அவை இரண்­டுமே முடி­யாமல் போயுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து எம்மால் ஒரு­போதும் பய­ணிக்க முடி­யாது என்­பது குறு­கிய காலத்திலேயே தெரிந்­து­விட்­டது. ஆகவே நாம் அர­சாங்­கத்திலிருந்து வெளி­யேறி எதி­ர­ணியில் இணைந்­து­கொண்டோம். 

நாம் எதிர்க்­கட்­சிக்கு வந்­த­வுடன் இரு தோணிகளில் கால் வைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இரு கால்­க­ளையும் எதிர்க்­கட்சியின் பக்­கமே வைத்­து­கொண்டு செயற்­ப­டு­கின்றோம். 

"நாம் அந்­தப்­ பக்­கமும் உள்ளோம் – இந்தப் பக்­கமும் உள்ளோம் – ஜனா­தி­ப­தி­யு­டனும் செயற்­ப­டு­கின்றோம் – மஹிந்த அணி­யு­டனும் உள்ளோம்" போன்ற கருத்­துக்களை முன்­வைப்­பது தவ­றா­னது. 

நாம் இனி அந்தப் பக்கம் செல்­லப்­போ­வ­தில்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தே அடுத்தகட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோமெனத் தெரிவித்துள்ளாா்.