பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.! - THAMILKINGDOM பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.! - THAMILKINGDOM

  • Latest News

    பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.!

    2018 ஜூன் மாதம் ஜப்பானின் ஜிபு நகரத்தில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் கனிஷ்ட ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீர, வீராங்கனைகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளாா். 

    குறித்த விளையாட்டு விழாவில் 03 தங்கப் பதக்கங்களையும் 04 வெள்ளிப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக் கங்களையும் இலங்கை விளையா ட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பெற்றுள்ளனா். 

    இவர்களது திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்களது எதிர்கால முன் னேற்றத்திற்காக தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். விளையாட்டு துறை யிலுள்ளவர்களை வலுவூட்டி அவர்களின் எதிர்கால பயணத்திற்கும் விளை யாட்டு துறையின் முன்னேற்றத்திற்கும் அரசாங்கம் அனைத்து வசதிகளை யும் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.  

    இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போஷாக்கு நிலை மைகளை மேம்படுத்து வதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் அனு சரனையை வழங்கு வதற்கு பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

    விளையாட்டு துறைக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அந்த அனு சரணைக்கேற்ப வரி நிவாரணங்களை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அமைச்சரவ யுடன் கலந்துரையாடி அந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா். 

    2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வெற்றி கொள்வதே முக்கிய நோக்கமாகும். 

    இந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதன் மூலம் மெய்வல்லுனர் போட்டி களில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு நாட்டில் புதியதோர் எழுச்சியை ஏற்படுத்த முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளாா். 

    2018ஆம் ஆண்டு கனிஷ்ட ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற அக்குரம்பொட வீரகெப்பெடிபொல மத்திய மகா வித்தியாலயத்தின் எஸ்.அருண தர்ஷன, குருணாகலை மலியதேவ கல்லூரியின் பீ.எம்.பீ.எல். கொடிகார, கொழும்பு புனித பெனடிக் கல்லூரியின் கே.பி.பீ.ஆர்.ரவிஷ்க இந்திர ஜித், கொழும்பு நாலந்தா கல்லூரியின் ஜீ.டி.கே.கே. பபசர, 

    குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியின் பாரமி வசந்தி மாரிஸ்டெலா, வளல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கே.ஜி.தில்ஷி குமாரசிங்க, கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் அமாஷா டி சில்வா, வத்தளை லயிஷியம் சர்வதேச பாடசாலையின் சசினி தாரக்கா திவ்வியாஞ்சலி, நுகேகொட லயிஷி யம் சர்வதேச பாடசாலையின் ருமேஷா இசாரா அத்திடிய ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். 

    அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அதி காரிகள், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பெற் றோர், பாடசாலை அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனா். 


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top