அசாம் மாநிலத்தை புரட்டிய கனமழை - 4½ லட்சம் பேர் பரிதவிப்பு, 12 பேர் பலி.!
கனமழையின் காரணமாக கரீம் கஞ்ச் மற்றும் ஹைலாகாண்டி உள்பட 6 மாவட்டங்கள் கனமழையால் பாதிக் கப்பட்டு உள்ளன. பல இடங்களில் நதி களின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத் தில் 4½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இதுவரை யில் 12 பலியானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பரிதவிப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.









