கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - முதலமைச்சா்.!
ஒரு ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல் லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உரு வாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது என்று வட மாகாண முத லமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு மேலும் தெரிவிக்கையில்,
என்னை முதலமைச்சர் பதவிக்கு கொண்டு வந்தவர் சம்பந்தன். இது வரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நட ந்து வந்துள்ளேன்.
கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டு வராது இருக்க முடியாதவன் நான்.
அதனால் எனக் கும் கட்சிக்கும் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும் என் நிலையை புரிந்து நட வடிக்கையில் இறங்கி வந்தவர் சம்பந்தன்.
ஆனால் கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள் ளார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக் கட்டுமெனத் தெரிவித்துள்ளாா்.









