தேரர்கள் மீது துப்பாக்கி சூடு; கிரிவெஹர பகுதியில்.!
கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெஹர ரஜமகா விகாரையில் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விகாரையின் விகாராதி பதியான கோபாவாக தம்மிந்த தேரர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில்,
நேற்று இரவு 11 மணி யளவில் ஜீப் ரக வாகனமொன்றில் வந்த மூன்று துப்பாக்கிதாரிகள் ரஜ மகா விகாரையின் வளாகத்தினுள்ளே துப்பாக்கி பிரயோகத்தை தொடுத்துள் ளனா்.
குறித்த விகாரையின் விகாராதிபதியான தம்மிந்த தேரர் உட்பட மற்றுமொரு தேரரும் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுதிக் கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கிதாரிகள் பய ணித்த ஜீப் வாகனத்தை மீட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.